பங்குச்சந்தை என்றால் என்ன? பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? வாங்க பங்குச்சந்தை பற்றி கற்றுக்கொள்ளலாம்...

Wednesday, 14 May 2025

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை!!! இப்போ என்ன செய்யலாம்?

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை!!! இப்போ என்ன செய்யலாம்?

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதாவது தங்கத்தின் விலை ஒரு நாள் உயருவதும் ஒருநாள் சரிவதுமாக உள்ளது. இதன் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்திய, பாகிஸ்தான் போர் பதட்டம் தணிந்து இருப்பது, அமெரிக்க, சீனா இடையேயான வர்த்தக போரும் தணிந்திருப்பது போன்ற காரணங்களினால் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது. மே 14ம் தேதியான இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 சரிந்துள்ளது.

ஆபரணம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.8,805 என்ற நிலையில் விற்பனையாகிறது. 1 பவுன் தங்கத்தின் விலை ரூ.400 வீழ்ச்சி அடைந்து ரூ.70,440 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.52 குறைந்து ரூ.9,606க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.76,848 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.109 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,09,000 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

99947 19127 - உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள்...

.
.