69,000-க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை
சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் (மே 13-ம் தேதி) காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்தமாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, 8,855-க்கு விற்பனையானது.
தொடர்ந்து நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440 ஆக விற்பனையானது.
ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது: இந்நிலையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment